செவ்வாய், 21 மே, 2019

21-5-2019 : இலக்கியக் கூடுகை ( கந்தர்வன் சிறுகதைகள் )

திகதி : 21-5-2019
நாள்   : செவ்வாய்
கலந்துகொண்டோர் :

1. சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
2. எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான்
3. எழுத்தாளர் திரு.அ.பாண்டியன்
4. விரிவுரையாளர் திரு.குமாரசாமி
5. ஆசிரியர் திரு.மணி ஜெகதீசன்
6. எழுத்தாளர் திரு.சு.யுவராஜன்
7. திரு.ஹ.ஹரிராஸ்குமார்

கலந்துரையாடல் விடயங்கள் :

1. எழுத்தாளர் கந்தர்வனின் " கந்தர்வன் கதைகள் " என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து 4 சிறுகதைகள் ( தூக்கம், சவடால், சாசனம் , அனுமர் காத்திருக்கிறார் ) விரிவாகப் பேசப்பட்டன. 

2. கூலிம் நவீன இலக்கியக் களத்தின் வருடாந்திர இலக்கிய நிகழ்ச்சி குறித்தும் அளவளாவப்பட்டது.



சனி, 24 நவம்பர், 2018

அனைத்துலக நவீனத் தமிழிலக்கியக் கருத்தரங்க"-த்தின் வலையொளி காணொளி இணைப்புகள்

கடந்த 24, 25 நவம்பர் 2018-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களம் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த "அனைத்துலக நவீன தமிழிலக்கியக் கருத்தரங்க"-த்தின் காணொளிகள்.


Image result for su venugopal 

1. நாவல் / சிறுகதை - சு.வேணுகோபால்

2. நாட்டார் இலக்கியம் - சு.வேணுகோபால்

3. இலக்கியத்தில் சூழியல் - சு.வேணுகோபால்


Related image


4. சிறந்த கதைகளின் கூறுகள் - பவா செல்லதுரை

5. கதை விமர்சனம் - பவா செல்லதுரை

6. இலக்கியமும் இரசனையும் - பவா செல்லதுரை


Image result for swami brahmananda saraswati


7. நன்றியுரை - சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

செவ்வாய், 20 நவம்பர், 2018

வட மலேசியாவில் “ அனைத்துலக நவீனத் தமிழிலக்கியக் கருத்தரங்கம்”


கெடா மாநிலத்தின் கூலிம் வட்டாரத்தில் மாதந்தோரும் மிகத்தீவிரமாக இலக்கிய கூட்டத்தினை நடத்தி வரும் கூலிம் நவீன இலக்கியக் களமும் பிரம்மவித்யாரண்யமும் இணைந்துஅனைத்துலக நவீனத் தமிழிலக்கியக் கருத்தரங்கம்ஒன்றை எதிர்வரும் 24, 25 நவம்பர் 2018-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரலில் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளனர். ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நாடறிந்த எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான், பிரம்மாநந்த சரஸ்வதி சுவாமி , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள் திரு .தமிழ்மாறன், திரு .குமாரசாமி, நீண்டகால வாசகர் ஆசிரியர் திரு. மணிஜெகதீஸ், எழுத்தாளர் பாண்டியன், எழுத்தாளர் பாலமுருகன்,  ஆகியோர் ஒரு நல்ல நாளில் மாலை வேளையில்,   கூலிமில் இருக்கும் சுவாமியின் தியான ஆஸ்ரமத்தில் குழுவாக அமர்ந்து தாங்கள் வாசித்த  சில சிறுகதைகள் பற்றி விரிவாகவும் அவரவர் பார்வையை, விமர்சனத்தை வைத்தும் அளவளாவ ஆரம்பித்ததே இந்த நவீன இலக்கியக் களத்தின் தொடக்ககால பின்னணி. அது மிகச் சுவாரஸ்யமான தொடக்கமாக அமையவே, திங்கள்தோறும் ஒரு செவ்வாய்க்கிழமையில் இந்த உரையாடல் இன்றுவரை நிகழ்ந்து வருகிறது. இது இன்றைக்கு ஐந்தாவது ஆண்டைத் தொட்டிருக்கிறது. இந்தக் குழுவில் பின்னர், திரு.தினகரன் ஜெயமோகன், திரு.யுவராஜன், திரு.ஹரிராஸ்குமார் ஆகியோர் இணைந்து கொண்டார்கள். தற்போது 10 உறுப்பினரைக் கொண்டு இயங்கிவரும் இந்தக் களம் முன்னெடுக்கும் ஒரு தரமான பயன்மிக்க நிகழ்ச்சிதான் மூன்றாவது ஆன்டாக மலர்ந்திருக்கும் இந்த அனைத்துலக நவீனத் தமிழிலக்கியக் கருத்தரங்கம்


நிகழ்ச்சி நாள் : 24 – 25 நவம்பர் 2018
நேரம் : காலை மணி 8.00 முதல் இரவு மணி 10.00 வரை
இடம் : பிரம்மவித்யாரண்யம் , சுங்கை கோப் மலைச்சாரல்

இந்தியா தமிழ் நாட்டைச் சார்ந்த எழுத்தாளரும் கதைச் சொல்லியுமான திரு.பவா செல்லதுரையும் , எழுத்தாளர் திரு.சு.வேணுகோபாலும் இலக்கியம் தொடர்பான பல விடயங்களை இந்நிகழ்ச்சியில் நம்மோடு பகிர்ந்துகொள்ள விருக்கின்றனர்.  நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ளோர் தவறாது கலந்துகொண்டு பயன்பெறலாம். தற்காலத்திற்கேற்றாற்போன்ற சிறப்பான தலைப்புகளில் இக்கருத்தரங்கின் அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .
கற்பனை வளத்தையும், இலக்கிய அறிவையும் பெருக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும். நிகழ்ச்சியில் பங்குபெருவோர்க்கு உணவும் உறைவிடமும் தரமான முறையில் தயார் செய்யப்படுகின்றன. முழுக்க முழுக்க இலக்கியத்தைச் சுவாசிக்கவிருக்கும் பங்கேற்பாளர்களுக்கு பங்குபெற்றதற்கான நற்சான்றிதழும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியின் கட்டண விபரம்:
பொது : ரி..100.00
உயர்கல்விக்கூடம் : ரி. 50.00
பள்ளி மாணவர்கள் : ரி. 30.00


பங்கேற்பாளர் செலுத்தும் கட்டணம் உறுதியாகப் பெருமளவு அறிவு இலாபத்தை ஈட்டித் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


தொடர்பிற்கு/முன் பதிவு செய்ய:

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி : 012-7093127
திரு..குமாரசாமி : 013-4315359
திரு.கோ.புண்ணியவான் : 019-5584905
திரு..தமிழ்மாறன் : 019-5700754
திரு.பாண்டியன் : 013-6696944 


*குறிப்பு : 23 நவம்பர் 2018 அன்று இரவு 7.00 தொடக்கம் பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு உணவு வழங்கப்படும்.

செல்லியல் கட்டுரை - கூலிம் நவீன இலக்கியக் களத்தின் 3-ஆம் ஆண்டு இலக்கியக் கூடுகை

செவ்வாய், 26 ஜூலை, 2016

கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களுடன் கலந்துரையாடல்

கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களுடன் கலந்துரையாடல்

நாள்: 26 ஜூலை 2016
இடம்:கூலிம் தியான ஆசிரமம்

பின்நவீனத்துவம், கவிதை அரசியல் போன்றவை பிரதானமாக உரையாடப்பட்டன




புதன், 14 அக்டோபர், 2015

சனி, 22 மார்ச், 2014

நவீன இலக்கிய முகாம் 1

நவீன இலக்கிய முகாம் 1

திகதி : 22-24 மார்ச் 2014
இடம்: பினாங்கு, கொடி மலை
சிறப்பு வருகை: ஜெயமோகன்








21-5-2019 : இலக்கியக் கூடுகை ( கந்தர்வன் சிறுகதைகள் )

திகதி : 21-5-2019 நாள்   : செவ்வாய் கலந்துகொண்டோர் : 1. சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி 2. எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான் 3. எழுத்தா...